கொத்துக்கறி புலாவ் செய்வது எப்படி? / How to Make Kothucury pulau?





கொத்துக்கறி புலாவ் செய்வது எப்படி? / How to Make Kothucury pulau?

0
தேவையான பொருட்கள்:

கொத்துக் கறி – அரைக் கிலோ

சாதம் – 2 கப்

வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)

இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

புதினா – கைப்பிடி

பச்சை மிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு

தாளிக்க :

எண்ணெய்

பிரிஞ்சி இலை

பட்டை

செய்முறை :
கொத்துக்கறி புலாவ் செய்வது
குக்கரில் கொத்துக் கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவும். 

ஒரு கடாயில் தாளிக்க கொடுத்த வற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். 

பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி சேர்த்து தேவைப் பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும். வையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)