கல்கத்தா ஜீரா செய்வது | Calcutta Zeera Recipe !





கல்கத்தா ஜீரா செய்வது | Calcutta Zeera Recipe !

0
தேவையானவை: 

பிரெட் - ஒரு பாக்கெட், 

சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், 

நெய் - 150 கிராம், 

சர்க்கரை - 250 கிராம், 

பால் - ஒரு கப், 

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, 

குங்குமப்பூ - சிறிதளவு. 

செய்முறை: 
கல்கத்தா ஜீரா செய்வது
பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கி விட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். 

கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித் தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... 

குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பரிமாறவும். இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)