தாய் கார்ன் வேர்க்கடலை டிக்கி செய்வது | Thai Corn Peanut Tikki Recipe !





தாய் கார்ன் வேர்க்கடலை டிக்கி செய்வது | Thai Corn Peanut Tikki Recipe !

0
தேவையானவை :

சோள விதைகள் 1 கப் வறுகடலை - ¼ கப்

பெரிய வெங்காயம் - 1

துளசி இலைகள் - 4

ஸோயா ஸாஸ் (Soya Sauce) - 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ¼ தேக்கரண்டி

சோள மாவு (Corn Flour) - தேவையான அளவு

மைதா மாவு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

கெட்டி தேங்காய் பால் - 2 தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

உப்புத் தூள் - தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்

செய்முறை :
தாய் கார்ன் வேர்க்கடலை டிக்கி செய்வது
சோள விதைகளை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண் டாக அரைத்துக் கொள்ளவும். வறுகடலையை தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு அகலமான கிண்ணத்தில் (Bowl) சோளம், வறுகடலைத் தூள், துளசி இலைகள், சர்க்கரை, பேக்கிங் சோடா, வெங்காயம், மிளகாய்த் தூள், உப்புத் தூள், சோயா ஸாஸ், கட்லெட் பதத்திற்குத் தேவையான அளவு மைதா, சோளமாவு, தேங்காய்ப் பால் இவற்றைக் கலந்துப் பிசைந்துக் கொள்ளவும். 

கட்லெட் வடிவங்களாக செய்து வைக்கவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துள்ள டிக்கிகளைப் பொரித்து (Shallow Fry) எடுத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)