சூப்பரான சிவப்பு மிளகாய் பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான சிவப்பு மிளகாய் பிரியாணி செய்வது எப்படி?

சிகப்பு மிளகாயை பொறுத்தவரை, பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.. இதனால், உணவின் சுவை + நிறம் கூடுகிறது.. சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. 
சிவப்பு மிளகாய் பிரியாணி செய்வது
மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட, நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள்.

இந்த சிகப்பு மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சிகப்பு மிளகாயில் வைட்டமின் A, B, M, K, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. காப்சைசின் என்ற பொருள் இதில் அடங்கியுள்ளது. 
மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமே இந்த ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகள்தான். ஆரஞ்சு பழத்தைவிட இந்த சிவப்பு மிளகாய் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளதாம். 

அரை கப் சிவப்பு மிளகாயில் 107.8 மிகி வைட்டமின் C இருக்கிறதாம். இந்த வைட்டமின் C சத்தானது, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. நம்முடைய சருமத்துக்கு பாதுகாப்பை தருகின்றன. 

கொலாஜன் உற்பத்தியையும் தூண்டுகிறது. சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப் பட்டிருக்கிறது.. அதில் சிகப்பு மிளகாயை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், ஆயுட்காலம் அதிகரிப்பதாக முடிவுகள் வந்துள்ளது.
தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், 

பழுத்து சிவந்த பச்சை மிளகாய் - 4, 

தக்காளி - 1, 

புளி - 50 கிராம், 

நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், 

செலரி இலைத் துண்டுகள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, 
பட்டை - ஒரு துண்டு, 

கிராம்பு, ஏலாக்காய் - தலா ஒரு துண்டு, 

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
பழுத்த மிளகாய் (சுத்தம் செய்தது), தக்காளி, புளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, வடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய் விட்டு... ஏலக்காய், கிராம்பு, பட்டை தாளித்து... வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிதமாக வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி அரிசி, உப்பு போட்டுக் கிளறவும். 
தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து செலரித் துண்டுகளைப் போட்டுக் கலந்தால்... வித்தியாசமான சிவப்பு மிளகாய் பிரியாணி சுவையாக ரெடி!
Tags: