கேழ்வரகு சேமியா புட்டு செய்வது எப்படி?





கேழ்வரகு சேமியா புட்டு செய்வது எப்படி?

0
செரிமான பிரச்சனை உள்ளவர்களும் கேழ்வரகு சாப்பிடக்கூடாது. குறிப்பாக பசியின்மை, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. 
கேழ்வரகு சேமியா புட்டு செய்வது
குளிர் காலங்களில் கேழ்வரகு சாப்பிடுவதை பொதுவாகவே தவிர்ப்பது நல்லது. குறிப்பாக குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டால் ஆகாது எனில் தொடவே கூடாது.

அவசர அவசரமாக காலையில் உணவை சமைத்து விட்டு வேலைக்கு செல்வோருக்கான அட்டகாசமான ரெசிபி தான் இந்த கேழ்வரகு சேமியா புட்டு.

இது ஒன் பாட் மீல் என்பதால் இதனை மிக எளிதாக செய்து விடலாம். இந்த புட்டு செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. அதே சமயம் ருசியும் படுதூளாக இருக்கும். 

சேமியா உப்புமா என்றாலே அலறி ஓடுபவர்கள் கூட இந்த மாதிரி புட்டு செய்து தரும் பொழுது விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். 

மேலும் வீட்டில் அரிசி காலி ஆகிவிட்டால் கூட இந்த கேழ்வரகு சேமியா புட்டு ரெசிபியை தாராளமாக நீங்கள் மதிய உணவிற்கு கூட தயாரித்து சாப்பிடலாம். 

சுவையான இந்த கேழ்வரகு சேமியா புட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் : 

கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு 

செய்முறை : 

தேங்காயை துருவிக் கொள்ளவும். கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும். 

பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள்,

தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும். சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இரவு உணவுக்கு பிறகு, சிறிது வெல்லத்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)