தேங்காய் வெஜிடபிள் கொழுக்கட்டை செய்வது | Make Coconut Vegetable Pudding !





தேங்காய் வெஜிடபிள் கொழுக்கட்டை செய்வது | Make Coconut Vegetable Pudding !

0
தேவையானவை: 

இட்லி அரிசி – 2 கப், 

நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், 

பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), 

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், 

கடுகு – அரை டீஸ்பூன், 

கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, 

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, 

பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – அரை கப், 

எண்ணெய் – 2 டீஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 
தேங்காய் வெஜிடபிள் கொழுக்கட்டை செய்வது
அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லி தாளிக்கவும். 

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இத்துடன் மாவு, தேங்காய் பல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வெந்ததும் ஆற விட்டு, உருண்டை பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)