மாதுளை பச்சைபயிறு சாலட் செய்வது | Green Palm Salad with Pomegranate Recipe !





மாதுளை பச்சைபயிறு சாலட் செய்வது | Green Palm Salad with Pomegranate Recipe !

0
தேவையான பொருட்கள் : 

முளை கட்டிய பச்சைபயிறு - 1 கப்

மாதுளை விதைகள் - 1 கப்

கொத்த மல்லி இலை - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு

கடுகு - டீஸ்பூன்

உப்பு - போதுமான அளவு

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன் 

செய்முறை : 
மாதுளை பச்சைபயிறு சாலட் செய்வது
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முளை கட்டிய பச்சை பயிறு, மாதுளை விதைகள், வறுத்த வேர்க்கடலை, கரம் மசாலா, கொத்த மல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்றாக கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு போட்டு பொரிந்ததும் சாலட்டில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். ஆரோக்கியம் மற்றும் சுவையான மாதுளை பச்சைபயிறு சாலட் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)