உடல் சூட்டை போக்கும் அருமையான பானகம் செய்வது !





உடல் சூட்டை போக்கும் அருமையான பானகம் செய்வது !

0
கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவ தால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். 
உடல் சூட்டை போக்கும் பானகம்
கோடைக்காலம் தொடங்க இன்னும் சில நாள்கள் இருந்தாலும் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. 
ஏற்கெனவே போதுமான அளவு பருவமழை பெய்யாததால் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதனால் நம் உடலில் சூடு அதிகமாகி விடும். 

ஆக, நீர்ப்பற்றாக்குறை காரணமாக சரும நோயில் தொடங்கி சிறுநீரகப் பிரச்னை, ஆசனவாய் எரிச்சல், மூலம், மலச்சிக்கல் எனப் பிரச்னைகள் அணிவகுக்கத் தொடங்கி விடும்.

இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க பானகம் சிறந்த சாய்ஸ்.
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்

புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை,

பனை வெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்,

சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்,

மிளகுத் தூள் - 1/4 டீ ஸ்பூன்,

தண்ணீர் - 2 கப்

செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். 

கரைத்த புளி நீரில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் முழுமையாக கரைந்த பின் வடிகட்டியால் இறுக்கவும். 
அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)