முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
முதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கி யத்துடன் வாழலாம். எனவே அவர்களுக்கான உணவு முறைகள் பற்றி இங்கு காண்போம்.
முதியவர்கள் சாப்பிட வேண்டிய உணவு
முதியோர்கள் அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கப் பெற்று உடல் வலிமையை பெறும்.

கால்சியம் அதிகம் நிறைந்துள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகிய வற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ஏனெனில் கால்சியம் சத்துக்களும் வயதானவர் களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். முதியோர்கள் மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்.
600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !
எனவே அரிசி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து கோதுமை மற்றும் சிறுதானியங் களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிறுதானியங் களை உண்பதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் எலும்புகளை உறுதி யடையச் செய்யும்.

மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவ தால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது. பாகற்காய், புடலங்காய், காலிஃபிளவர், கொத்த மல்லி, காய்ந்த மிளகாய் போன்றவையும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும் உணவுகளாகும். 

இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கலாம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

முதியவர்கள், குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். 
சோயா, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உயர்ரக காளான் போன்ற வற்றிலும் புரதம் நிறைந்துள்ளது.

எனவே வாரம் இரு முறையாவது இவ்வகை உணவுகளை வயதானவர்கள் சாப்பிட வேண்டும்.
1 மணி நேரத்திற்கு ரூ.10 ஆயிரமாம் - கல்லூரி மாணவிகள் !
சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரை அருந்த வேண்டும். நமது உடல் ஆரோக்கி யத்திற்கு பக்கதுணையாக இருப்பது பழங்கள்.

எனவே முதியோர்கள் ஆரோக்கியமான வாழ்வினைப் பெறுவதற்கு கண்டிப்பாகப் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை யெனில் எளிதில் நோய்கள் நம்மைத் தாக்கும். பொதுவாக வயதானவர் களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தே காணப்படும்.
கொழுப்பை குறைக்கும் தேங்காய் எப்படி தெரியுமா?
எனவே இவர்கள் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

வயதானவர் களுக்கு ஏற்படும் பெரிய பிரச்சனை மறதி. எனவே உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, வாழைப்பழம்,

பட்டை, வல்லாரைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதனை எளிதாக சரிசெய்ய முடியும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚