ஆவியில் வேக வைத்த இடியாப்பத்தால் கிடைக்கும் பலன்கள் !





ஆவியில் வேக வைத்த இடியாப்பத்தால் கிடைக்கும் பலன்கள் !

இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது.
இடியாப்பத்தால் கிடைக்கும் பலன்கள்
ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 

45 கலோரிகள், 

0.27 கிராம் கொழுப்பு, 

9.68 கிராம் கார்போ ஹைட்ரேட், 

0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன.

ஆயுர்வேத மருத்துவ முறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சம நிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். 

இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச் சத்து மற்றும் கொழுப்புச் சத்து அனைத்தும் உள்ளன. 

எனவே, உடலைக் கட்டுக் கோப்பாகவும் ஆரோக்கி யமாகவும் வைத்திருக்க உதவும்.

எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேக வைத்துச் செய்யப் படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையை யும் ஏற்படுத்தாது.

நோய் வாய்ப்பட்டவர் களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். 

குழந்தை களுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு. ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம்.
வயிற்றுப் போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம். பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம். 

வயிற்றுக் கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம். கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய் பால், பால், நெய், நாட்டுச் சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.

கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்... இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் .
இதய நோய்களுக் கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும் . சர்க்கரை நோய் உள்ளவர் களுக்கு நல்லது கோதுமை, சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது,

இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதே போல சிறு தானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம். ஆக, இடியாப்பம் நல்லது. 

வெளியில் வாங்கும் போது இது சுத்தமானது தானா, ஆரோக்கிய மான முறையில் தயாரிக்கப் பட்டதுதானா என்பது தெரியாது. 

ஒரு முறை கற்றுக் கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் காக்கலாம்!
Tags: