ரெட் கறி சிக்கன் செய்வது | Red Curry Chicken Makes !





ரெட் கறி சிக்கன் செய்வது | Red Curry Chicken Makes !

0
தேவையானவை :

மூங்கில் குறுத்து (Bamboo Shoot) - 200 கிராம்

கோழிக்கறித் துண்டுகள் (எலும்பு இல்லாதது) - 500 கிராம்

ரெட்கறி பேஸ்ட் - 3 மேஜைக் கரண்டி

ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) - 2 மேஜைக் கரண்டி

பனங்கற்கண்டு (Palm Sugar) - 2 தேக்கரண்டி

நார்த்தங்காய் தோல் - 5

சிகப்பு மிளகாய் - 2

துளசி இலை - அரை கப்

உப்பு - தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
ரெட் கறி சிக்கன் செய்வது
சுடு தண்ணீரில் மூங்கில் குறுத்து மற்றும் பனங்கற்கண்டு போட்டு ஊறியபின் எடுத்து கழுவி, வடிய வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி, ரெட் கறி பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். 

எண்ணெய் மிதந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். மீதமுள்ள தேங்காய்ப் பால், மூங்கில் குறுத்து, ஃபிஷ் ஸாஸ் இவற்றை சேர்க்கவும். 

ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக் கப்படும் உணவு வகைகளில் உப்பு சரி பார்த்து, தேவைப் பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும். நார்த்தங்காய் தோல் துண்டுகள், நீளமாக கீறிய மிளகாய் போட்டுக் கிளறி விடவும். இறக்கி வைத்து, துளசி இலை போட்டு பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)