உருளைக்கிழங்கு ரெய்தா செய்வது எப்படி? | How to Make Potato Raina?





உருளைக்கிழங்கு ரெய்தா செய்வது எப்படி? | How to Make Potato Raina?

0
தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 100 கிராம்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம் - 1,

புளிக்காத தயிர் -1 கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

கொத்த மல்லி - அலங்கரிக்க.

தாளிக்க :

கடுகு,

உளுந்து,

கறிவேப்பிலை,

பெருங்காயம்

செய்முறை :
உருளைக்கிழங்கு ரெய்தா

உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, 

அதை மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும். இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)