தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி செய்வது எப்படி?





தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி செய்வது எப்படி?

0
இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். 
தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி செய்வது எப்படி?
70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. 

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது. தேயாது.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

சிறிய உருளைக்கிழங்கு - 100 கிராம்

சோயா சாஸ் - 2 ஸ்பூன்

தேன் - 2 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

செய்முறை:
தேன் உருளைக்கிழங்கு ஃபிரை ரெசிபி செய்வது எப்படி?
முதலில், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி ஆங்காங்கே குச்சி வைத்து குத்தி விடவும். 

இத்துடன், சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், பச்சை மிளகாய், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு ஆகிய வற்றை சேர்த்து கலந்து சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

இதன் பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருளைக் கிழங்கு கலவையை சேர்த்து நன்றாக கிளறி வறுத்து இறக்கவும். 

வறுத்த உருளைக்கிழங்கை ஒரு பிளேட்டில் வைத்து கொஞ்சம் ஆறியதும், மீதமுள்ள தேனை அதன்மீது ஊற்றி பரிமாறவும். அவ்ளோதாங்க.. சுவையான தேன் உருளைக் கிழங்கு ஃபிரை ரெடி..!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)