கேரட் அல்வா செய்வது | Carrot Alva Recipe !





கேரட் அல்வா செய்வது | Carrot Alva Recipe !

0
கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். 
கேரட் அல்வா
பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும். 

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மை யாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.

கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். 

வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.

தேவையானவை

கண்டென்ஸ்டு மில்க் - 2 மேஜைக் கரண்டி

கேரட் - 4

சர்க்கரை - 2 கோப்பை

வறுத்த முந்திரி - 10

பால் - 2 மேஜைக் கரண்டி

ஏலக்காய் - 4

செய்முறை :

முதலில் கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ள வேண்டும். துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

பின் அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகிய வற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.

நன்கு பதமாக வெந்ததும், அடுப்பி லிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் மிதமான சூட்டிலோ அல்லது ஆறியப் பின்னரோ சுவைத்தால் நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)