உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைக்காய் மாவு !





உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைக்காய் மாவு !

0
மார்க்கெட்களில் டயட் ஃப்ரெண்ட்லி உணவு பொருட்கள் ‘க்ளூடன் ஃபிரி' என்ற வாசகத்துடனே வருகிறது. பலரும் . க்ளூடன் அலர்ஜி இல்லாதவர்கள் கூட டயட்டிற்கே மாறுகிறார்கள். ஆனால் அலர்ஜி இல்லாதவர்கள் இந்த டயட்டை பின்பற்ற வேண்டிய அவசிமில்லை .
வாழைக்காய் மாவு

இதனால் எந்தவொரு பலனும் கிடைப்பதில்லை. மார்க்கெட்டில் க்ளூடன் ஃபிரி மாவுகளின் தேவை அதிகரித்துக் கொண்ட்டே வருகிறது. வாழைக்காய் மாவு குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

ஆப்ரிக்கா மற்றும் ஜமாய்க்கா ஆகிய நாடுகளில் கோதுமை மாவிற்காக மாற்றாக பயன்படுத்தப் படுகிறது. விலையும் குறைவு என்பதால் பலரும் பயன்படுத்து கின்றனர். இப்போது இந்த வாழைக்காய் மாவு பிரபல மடைந்து வருகிறது. 

தனித்துவமான சுவையுடன் வருகிறது. வாழைக்காயை உலர வைத்து அரைப்பதால் பிராசஸ் செய்யப்பட்ட கோதுமை மாவை விட இது உடல் நலத்திற்கானது.

வாழைக்காய் மாவின் நன்மைகள்

க்ளூடன் அலர்ஜி உள்ளவர் களுக்கு இந்த வாழைக்காய் மாவு சிறந்த மாற்று உணவாக இருக்கும்.

1. ப்ரோபயோடிக் ஃபைபர் அதிகமுள்ளது

வாழைக்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. குடல் ஆரோக்கி யத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பதுடன் செரிமான த்தை மேம் படுத்துகிறது.

2. பொட்டாசியம் நிறைந்த உணவு

பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மிகவும் ஏற்றது. மேலும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. தசை வலிமைக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் ஏற்றது.


3. ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் (resistant starch) அதிகமுள்ளது

வாழைக் காயில் ஸ்டார்ச் அதிகமுள்ளது. இது சர்க்கரை நோய்க்கான இன்சுலின் உணர்திறனை மேம்படுத்து கிறது. இது சிறுகுடலில் செரிமானம் ஆகாது. பெருங்குடலில் மட்டுமே செரிமானம் ஆகுவதால் நார்ச்சத்தாக மாறுகிறது.

வாழைக்காய் மாவில் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால் மற்ற மாவுகள் பயன்படுத்தும் அளவை விட குறைவாகவே பயன்படுத்த முடியும்.

வாழைக்காய் மாவில் சமைக்கவும் பேக்கிங் ஆகிய வற்றை செய்ய முடியும். அடுத்த முறை பிரவுனி செய்யும் போது வாழைக்காய் மாவை பயன்படுத்திப் பாருங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)