அவகோடா - பப்பாளி சாலட் செய்வது | How to make Avakado papaya salad?





அவகோடா - பப்பாளி சாலட் செய்வது | How to make Avakado papaya salad?

0
தேவையான பொருட்கள் :

அவகோடா - 2

பப்பாளி பழம் - பாதி

எலுமிச்சை பழம் - 1

உப்பு - தேவைக்கு

தேன் - கால் டீஸ்பூன்

மிளகு தூள் - கால் டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - கால் டீஸ்பூன்

கொரகொரப்பாக பொடித்த சிவப்பு மிளகாய் - சிறிதளவு

செய்முறை :
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். அவகோடா, பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு நீளமான துண்டுக ளாக வெட்டிக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு, தேன், மிளகு தூள், ஆலிவ் ஆயில், கொர கொரப்பாக பொடித்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான அவகோடா - பப்பாளி சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)