டேஸ்டியான எலுமிச்சை சூப் செய்வது எப்படி?





டேஸ்டியான எலுமிச்சை சூப் செய்வது எப்படி?

0
தெய்வ வழிபாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று எலுமிச்சை பழம். துஷ்ட சக்திகளை அழிக்கும் வல்லமை கொண்டது இந்த தேவ கனி. ஆன்மீக ரீதியாகப் பல சக்திகளை எலுமிச்சைப்பழம் கொண்டுள்ளது. 
எலுமிச்சை சூப் - Lemon Soup
திருஷ்டி கழிப்பதற்காக எலுமிச்சை பழம் பயன்படுத்தப் படுகிறது. வெறும் வயிற்றில் தேனுடன் கலந்த்து எலுமிச்சை நீரை உட்கொள்வது செரிமான செயல்முறைக்கு உதவும் என்று நாம் பல முறை கேள்விப் பட்டிருக்கிறோம். 

இருப்பினும், அதிகப்படியான எலுமிச்சை சாறு வயிற்றை சீர்குலைக்கும், மேலும் இது செரிமான செயல்முறையையும் குறைக்கும், இது வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.எலுமிச்சை சாற்றில் அதிக அமிலத்தன்மை உள்ளது. 

எனவே ஒரு எலுமிச்சையில் சாறு அதிகமாக இருக்கும் போது, ​​அது உங்கள் பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது காலப்போக்கில் பல் சிதைவையும் ஏற்படுத்தும். 
இங்கே பல் அரிப்பு என்பது கனிம மயமாக்கப்பட்ட பல் பொருட்களின் வேதியியல் இழப்பு (chemical loss of mineralized tooth substances) ஆகும். 

எனவே, உங்களுக்கு சென்சிடிவ் ஆன பற்கள் இருந்தால் நீங்கள் எலுமிச்சை போன்ற சிட்ரிக் உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். சரி இனி எலுமிச்சம் பழம் பயன்படுத்தி டேஸ்டியான எலுமிச்சை சூப் செய்வது எப்படி?என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை 

எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்) 

காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர் 

பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப 

இஞ்சி - சிறிய துண்டு 

கொத்த மல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு 

எண்ணெய், உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு 

செய்முறை : 

முதலில் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

இதில் சிறிது மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு மல்லித் தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டி யாக்கிக் கொள்ளவும்). 
அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்த மல்லி தழை தூவி பரிமாறவும். 
விருப்பப் பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறவும். சுவையான எலுமிச்சை சூப் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)