சோயா பனீர் பிரியாணி செய்வது எப்படி?





சோயா பனீர் பிரியாணி செய்வது எப்படி?

0
பனீர் என்பது சுண்ணாம்புச் சாறு, வினிகர் அல்லது சிட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி சூடான பாலை காய்ச்சுவதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு விலங்குப் பொருளாகும். 
சோயா பனீர் பிரியாணி
இதை பச்சையாகவும், பல வகையான உணவுகளை தயாரிக்கவும் சாப்பிடலாம். பனீரில் அதிக அளவு ஜிங்க் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. பனீரில் புரதம் நிறைந்துள்ளது. 

இது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். பனீர் வைட்டமின் பி12 நிறைந்த ஆதாரமாக உள்ளது.
புரதச்சத்து என்று வரும் போது, சைவ மற்றும் அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் உள்ளன. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பன்னீர், அசைவ உணவுப் பிரியர்களுக்கு சிக்கன். 

பன்னீரில் அதிகளவு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், முடக்குவாதத்தை தடுக்க இது பெரிதும் உதவுகிறது. பன்னீர் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. 

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆஸ்துமா, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

தேவையானவை: 
பாசுமதி அரிசி - ஒரு கப்,

துருவிய சோயா பனீர் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப்,

நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் இரண்டும் சேர்ந்து - கால் கப்,

கரம் மசாலாத் தூள், தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

ஒன்றிரண்டாகப் பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் - ஒன்றரை டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

முந்திரி - சிறிதளவு,

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பொடித்த மசாலா சேர்த்து தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். 

பச்சை வாசனை போனதும்... நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள்

பிறகு, கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் போட்டு வதக்கி, துருவிய சோயா பனீர் சேர்த்துக் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து அரிசியைப் போட்டுக் கிளறி மூடவும்.

மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)