நண்டு ரோஸ்ட் செய்வது எப்படி? / How to Make Crab Roast !
Subscribe Via Email
தேவையானவை
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் பால் - 4 மேசைக் கரண்டி
மிளகு பவுடர் - 3/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப்பவுடர் - ஒரு தேக்கரண்டி
நண்டு - ஒரு கிலோ
செய்முறை :
முதலில் நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும்,பின்பு வெங்காய த்தை பொடிதாக நறுக்கவும்
.வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும்,
சூடானதும் அதில் நறுக்கிய வெங்காய த்தைப் போட்டு பொன்னிற மாகும் வரை வதக்கவும். பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும்.
பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும். பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் மூடி வேக விடவும்,
அடிக்கடி திறந்து கிளறி விடவும், நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியான வுடன் இறக்கவும்.பின்பு பரிமாறவும்