சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? / How to Make Chinese Fried Rice?





சைனீஸ் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? / How to Make Chinese Fried Rice?

0
தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப்,

நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - ஒரு கப்,

குடமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று,

பூண்டு - 3 பற்கள்,

வெங்காயத் தாள் - ஒரு கட்டு (நறுக்கவும்),

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,

ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

மிளகுத் தூள், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்
கோஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். சிறிதளவு வெங்காயத் தாளை தனியே எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தேவையான நீர் விட்டு மலர வேக வைத்துக் கொள்ளவும். 

அகலமான கடாயில் மீதமுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத் தாள், கோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். 

பிறகு, சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும். தீயைக் குறைத்து, பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்த வெங்காயத் தாளைத் தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)