அருமையான கோழி தக்காளி சூப் செய்வது எப்படி?





அருமையான கோழி தக்காளி சூப் செய்வது எப்படி?

0
கோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 
அருமையான கோழி தக்காளி சூப் செய்வது எப்படி?
ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். 

இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர். மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது. பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.

இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.

தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். 

இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க  சக்தியினை பாதிக்கின்றது.

தேவையானவை

தக்காளி - 4

கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு

நடுத்தரமான வெங்காயம் - அரை

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறுதுண்டு

கொத்த மல்லித் தழை - சிறிது

முட்டை - 2

கார்ன் ஸ்டார்ச் - 2 மேசைக் கரண்டி

சிக்கன் ஸ்டாக் - 4 கப்

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

தக்காளி சாஸ் - 4 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

சீனி - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரைத் தேக்கரண்டி

அஜின மோட்டோ - ஒரு சிட்டிகை

வினிகர் - 2 மேசைக் கரண்டி

செய்முறை :
கோழி தக்காளி சூப்
முதலில் தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்த மல்லித் தழை ஆகிய வற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

கோழிக் கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.. 

இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக். முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன் ஸ்டார்சினை கலந்து கொள்ளவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேக விடவும். 
பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து. தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங் களுக்கு வேக விடவும். 

இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோ மோட்டோ, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு கார்ன் ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும் .அதன் பின் வினிகரை ஊற்றவும். 

அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும். முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும் போது நறுக்கின கொத்த மல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)