சுவையான முட்டைக்கோஸ் பிரியாணி எப்படி செய்வது?





சுவையான முட்டைக்கோஸ் பிரியாணி எப்படி செய்வது?

0
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும். விஷத்தன்மை அதிகம் உண்டாகி யிருக்கும். முட்டைகோசுக்கு விஷத்தன்மையை நீக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. 
சுவையான முட்டைக்கோஸ் பிரியாணி எப்படி செய்வது?
அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது குறைந்தது முட்டைகோஸ் வேகவைத்த நீரைக் குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகள் நீங்கும். 

அதோடு அதிக மதுப்பழக்கத்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றக் கூடியது. சிலருக்கு என்ன தான் முகத்தை அடிக்கடி கழுவினாலும் டல்லாகவே இருக்கும். 

பொலிவில்லாம் இருக்கும் சருமத்துக்குப் போதிய அளவு ஊட்டச்சத்து கிடைக்க வில்லை என்பதே அதன் பொருள். குறிப்பாக கொலாஜன் சுரப்பு குறைவாக இருந்தால் சருமம் பொலிவற்று காணப்படும். 
சருமம் பொலிவில்லாமல் இருப்பவர்கள் தினமும் முட்டைகோஸ் நீரை குடிப்பதோடு அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவி வர சருமம் பொலிவாக இருக்கும். 

அதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மற்றும் முகப்பருக்கள் மறையும். முட்டைகோஸின் நன்மை பற்றி பலருக்கு தெரிவதே இல்லை. முட்டைகோஸ் நல்ல ஞாபக சக்தியை தரவல்லது. 

அதில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பை தரவல்லது. தற்பொழுது முட்டைக்கோஸ் பிரியாணி எப்படி செய்வதென பாப்போம்.
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 250 கிராம்

முட்டைகோஸ் - 250 கிராம்

வெங்காயம் - நறுக்கியது ஒன்று,

தயிர் - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

இஞ்சி-சிறிதளவு,

பூண்டு- பாதி

பட்டை, கிராம்பு- தேவையான அளவு,

ஏலக்காய்- 5

தேங்காய்ப் பால் - அரை கப்

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

எண்ணெய் - 3 டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், அரிசியை ஊற வைத்து கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகிய வற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும். 
முட்டைக்கோஸ் பிரியாணி
இதனைத் தொடர்ந்து, குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் கொஞ்சம் சிறிதளவு நெய் ஊற்றி, பின்னர் காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம், லேசாக வெந்த பின்னர், முட்டை கோஸை போட்டு வதக்கவும். பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு, தயிர், தேங்காய் பால் சேர்த்து வதக்கவும். 
பின்னர் இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வந்ததும், ஊறவைத்த அரிசியை கொட்டி கிளறவும். 

பின்னர் பாத்திரத்தை மூடி பாதி வெந்ததும் திறந்து கிளறி மீண்டும் மூடி வெந்ததும், இறக்கி சூடாக பரிமாறவும். சுவையான முட்டைகோஸ் பிரியாணி ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)