நண்டு குருமா செய்வது எப்படி? / How Make Crab Kuruma?





நண்டு குருமா செய்வது எப்படி? / How Make Crab Kuruma?

0
தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ

வெங்காயம் - 4

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - அரை முடி

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு

கடுகு, பட்டை, சோம்பு, கசகசா, மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை :
நண்டு குருமா செய்வது
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காய த்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியம் தக்காளி, பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

தேங்காய், சோம்பு, கசகசா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கடுகு சேர்த்துத் தாளித்த பின்னர் அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகிய வற்றைப் போட்டு தாளித்த பின்னர் நண்டை அதில் கொட்டிக் கிளறுங்கள். 

ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதைச் சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடுங்கள். 

குழம்பு நன்றாகக் கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய கொள்ளவும். பின்னர் கொத்த மல்லித் தழை சேர்த்து இறக்குங்கள். நண்டு குருமா ரெடி.

குறிப்பு

தேவை யென்றால் தேங்காய் பாலும் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)