சை‌னீ‌ஸ் எள் காலிஃப்ளவர் செய்முறை / Chinese Sesame Cauliflower Recipe !





சை‌னீ‌ஸ் எள் காலிஃப்ளவர் செய்முறை / Chinese Sesame Cauliflower Recipe !

0
தேவையானவை 
காலிஃப்ளவர் - 1 

பேகிங் பவுடர் - ஒரு சிட்டிகை 

வெள்ளை எள் - 5 மேஜைக் கரண்டி 

நல்லெண்ணெய் - பொரிப்ப தற்கு 

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி 

மக்காச் சோள மாவு - அரை கப் 

எள் (செசமி) - தேவைக்கேற்ப 

மைதா மாவு - அரை கப் 

அஜினோ மோட்டோ - 1 சி‌ட்டிகை பேகிங் பவுடர் - 1 சிட்டிகை இஞ்சி, 

பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை : 
 சை‌னீ‌ஸ் எள் காலிஃப்ளவர் செய்முறை
முதலில் காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடு‌த்து, அதனை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 1 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும் .

பின் சோயா சாஸுடன் உப்பு, மிளகுத் தூள், பேகிங் பவுடர், சிறிது அஜினோ மோட்டோ சேர்த்து கலக்க வேண்டும் 

இதில் காலிஃப்ளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் .

பிறகு மைதா மாவு, ம‌க்கா‌ச் சோள மாவு, பே‌‌கி‌ங் பவுட‌ர், ‌சி‌றிது உப்பு, இ‌‌ஞ்‌சி, ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது ஆ‌கிய வ‌ற்றை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌‌ட்டு கலந்து மேல்மாவை பஜ்ஜி மாவு போல கரைக்க வேண்டும் 

பின்னர் ஊற வை‌த்‌திரு‌ க்கு‌ம் காலிஃப்ளவரை மேல் மாவில் தோய்த்து, எள்ளின் மேல் புரட்டி எடுத்து, சூடான நல்லெண்ணெ யில் பொரித் தெடுக்கவும்.

சுவையான சை‌னீ‌ஸ் எள் காலிஃப்ளவர் தயார் ! தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)