பாம்பே காஜா ஸ்வீட் செய்வது / Bombay Gaja Sweet Recipe !





பாம்பே காஜா ஸ்வீட் செய்வது / Bombay Gaja Sweet Recipe !

0
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 300 கிராம்

சர்க்கரை - 750 கிராம்

கார்ன் மாவு (சோள மாவு) - 3 டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு கலர் - 1/4 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1/2 லிட்டர் (பொரிக்க)

டேபிள் சால்ட் - ஒரு சிட்டிகை.

சர்க்கரை பாகு தயாரிக்க:


அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரையை போட்டு முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஆரஞ்சு கலர் சேர்த்து மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விட வேண்டும். 

பாகை விரலில் தொட்டுப் பார்க்கும் போது இரண்டு நூலாக வரும் போது அடுப்பை அணைக்க வேண்டும். பாம்பே காஜா போட்டு எடுக்கும் போது சர்க்கரை பாகு இறுக இறுக சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :
பாம்பே காஜா ஸ்வீட்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். கார்ன் மாவு நெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பிறகு பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டு கொள்ள வேண்டும். கார்ன் மாவு நெய் கலவையை அப்பளங்களின் ஒரு புறம் முழுமையாக தடவி கொள்ள வேண்டும். 

பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்ள வேண்டும் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்ள வேண்டும். அப்பளத்தை பாதியாக வெட்டி ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்ள வேண்டும் (முக்கோணமாக). 


அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கோணங் களை எண்ணெயில் (அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் ) போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

பொரித்து எடுத்த பாம்பே காஜாக்களை தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)