வெண்டைக்காய் மண்டி செய்முறை / Ladyfinger Mandi Recipe !





வெண்டைக்காய் மண்டி செய்முறை / Ladyfinger Mandi Recipe !

0
தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 1/2 கப்

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 8 பல்

தக்காளி - 1

புளி - 1 எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது

தாளிப்பதற்கு.
எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
வெண்டைக்காய் மண்டி
வெண்டைக் காயை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிற மாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெண்டைக் காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத் தன்மை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச் சாற்றினை ஊற்றி,

தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம். சூப்பரான வெண்டைக்காய் மண்டி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)