தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் ஆரோக்கிய மற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். 
Beautiful Black Hair

அது மட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கி விடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச் சத்தின்மை தான் காரணமாக இருக்கும். 

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவு களையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக் களையும் கொடுக்க வேண்டும்.

அதற்காக அழகு நிலையங் களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்ப தில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம். 

சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்ன வெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம். 

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமை யாதது.


மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெது வெதுப்பாக சூடேற்றி, தலையைத் தேய்த்து வர வேண்டும்.

இதனால் கூந்தல் ஆரோக்கிய மாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும். 

2) கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது.

ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு தேய்த்தால், கருமையான முடியைப் பெறலாம். 

3) முடிக்கு நிற மூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும். 
தலைமுடிக்கு அழகே கருப்பு

4) வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது.

ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது துண்டு (Scrap) அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.

இதனால் சூரியக் கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம். 

5) நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவ தில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது.

எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும். 

6) ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அசு(ஸ்)வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது.

எனவே இந்த அசுவகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும். 

7) அனைவரு க்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தி னால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.


8) கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டி னாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும்.

அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது. 

9) எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது.

ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும். 

10) முடிக்கு இராசயனம் கலந்த மயிரை சுத்தம் செய்யும் பொருள் (Shampoo) பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.
தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் ! தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 06, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚