ஸ்டீம்டு பனீர் செய்முறை | Steamed Paneer Recipe !





ஸ்டீம்டு பனீர் செய்முறை | Steamed Paneer Recipe !

0
தேவையானவை:

துருவிய பனீர் – ஒரு கப்,

கேரட் – ஒன்று (துருவிக் கொள்ளவும்), 

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – கால் கப்,

பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,

கடலை மாவு – கால் கப்,

தேங்காய்ப்பூ – 2 டேபிள் ஸ்பூன்,

கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஸ்டீம்டு பனீர்
துருவிய பனீர், துருவிய கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத் தூள், கடலை மாவு ஆகிய வற்றை ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் 

(தேவைப் பட்டால் 4, 5 சொட்டு தண்ணீர் சேர்க்கலாம்). 15 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்.

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, இந்த கலவையை வைத்து ஆவியில் 15 நிமிடம் வேக விடவும். 

வெந்ததும் எடுத்து விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். பரிமாறும் தட்டில் வைத்து, எண்ணெயில் கடுகு தாளித்து அதன் மேல் ஊற்றவும். தேங்காய்ப்பூ தூவி அலங்கரித்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)