ரிப்பன் காராசேவு செய்முறை / Ribbon Karacheve Recipe !





ரிப்பன் காராசேவு செய்முறை / Ribbon Karacheve Recipe !

0
என்னென்ன தேவை?

அரிசி மாவு – 2 கப்,

பொட்டுக் கடலை மாவு – 1 கப்,

தூள் உப்பு – 1 டீஸ்பூன்,

வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

சூடான எண்ணெய் – 1 பெரிய கரண்டி.

எப்படிச் செய்வது?
ரிப்பன் காராசேவு
அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு இரண்டையும் சலித்து உப்பு, மிளகாய்த் தூள் கலந்து சூடான எண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசறி விடவும். மாவை சமஅளவு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும். 

முதல் பகுதி மாவில் தண்ணீர் தெளித்து கலந்து பதமான மாவாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு நாழியின் உள்ளே எண்ணெய் தடவி அதன் உள்ளே மாவைத் திணித்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து நேரடியாக எண்ணெயில் முறுக்கு பிழிந்து கொள்ளவும். இருபுறமும் முறுக்கு நன்கு வெந்து கரகரப்பாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: 

பொட்டுக் கடலை மாவிற்குப் பதிலாக 1/2 கப் கடலைமாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு கலந்து செய்யலாம். 

ரிப்பன் முறுக்கு அச்சில் ஜிப் போல் உள்ள அச்சை பயன்படுத்தி னால் எள் சேர்க்க வேண்டாம். எள் சேர்த்தால் அச்சின் மத்தியில் சிக்கிக் கொண்டு முறுக்கு பிழிய வராது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)