பாலக் பனீர் செய்முறை | Palak Paneer Recipe !





பாலக் பனீர் செய்முறை | Palak Paneer Recipe !

0
தேவையானவை:

பாலக் கீரை – ஒரு கட்டு,

பனீர் – 100 கிராம், 

வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்), 

இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 3,

கிராம்பு – 2,

சீரகம், மிளகுத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

பூண்டுப் பல் – 2,

பால் – கால் கப், 

க்ரீம் (விருப்பப் பட்டால்) – 2 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாலக் பனீர்
சுத்தம் செய்த பாலக் கீரை, பூண்டுப் பல், பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். நீரை வடித்து எடுத்து வைக்கவும். 

கீரையை மட்டும் தனியே எடுத்து பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். பனீரை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி… அரை டீஸ்பூன் சீரகம், கிராம்பு தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த கீரை விழுது, உப்பு, கீரை வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 

கொதி வந்ததும் பனீர் துண்டுகள், மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மேலும் கொதிக்க விடவும். 

விருப்பப் பட்டால் க்ரீம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சைட்டிஷ்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)