நாஸி லிமா(க்) செய்முறை | Nazi Lima (Q) Recipe !





நாஸி லிமா(க்) செய்முறை | Nazi Lima (Q) Recipe !

0
தேவையானவை: 

வேர்க்கடலை – ஒரு கையளவு, 

வெள்ளரிக்காய் – ஒன்று. 

சாதத்திற்கு: 

பாஸ்மதி அரிசி – 2 கப், 

தேங்காய்ப் பால் – 2 கப், 

பாண்டன் இலை – ஒன்று, 

லெமன் க்ராஸ் – 2 இன்ச் அளவு, 

பூண்டு – 5 பல். 

லிமாவுக்கு: 

சின்ன வெங்காயம் – 5, 

பூண்டு – 3 பல், 

இஞ்சி – ஒரு இன்ச் அளவு, 

காய்ந்த மிளகாய் – 5, 

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, 

சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன், 

எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், 

உப்பு- தேவைக்கேற்ப.

செய்முறை:
நாஸி லிமா

அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரிலோ, பாத்திரத் திலோ தேங்காய்ப் பாலுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து (சாதம் வேக தேவையான அளவாக தண்ணீர் இருக்கும் படி கலந்து வைக்கவும்), 

அதில் தட்டிய பூண்டு, முடிச்சு போட்ட பாண்டன் இலை, லெமன் க்ராஸ், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். 

கொதி வருவதற்கும் முந்தைய நிலையில் அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து நன்கு கொதித்ததும் கிளறி அடிப்பிடிக்காத வண்ணம் தம் போடவும். 

காய்ந்த மிளகாயை தண்ணீரில் போட்டு ஒரு கொதி கொதித்ததும், 15 நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு அத்துடன் புளி, சர்க்கரை தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். 

வாணலியில் எண்ணெய் சூடானதும் வேர்க் கடலையைப் பொன்னிற மாகப் பொரித்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். 

புளித் தண்ணீர், சர்க்கரை, உப்பு, மிக்ஸி கழுவிய சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விட்டு இறக்க, லிமா தயார். 

ஒரு வட்ட கோப்பையில் சாதத்தை எடுத்து வைத்து அமுக்கி, ஒரு தட்டில் நடுவில் கொட்டவும். 

சுற்றி ஒரு பக்கத்தில் கொஞ்சம் லிமாவையும், மறு பக்கத்தில் வேர்க்கடலை யையும் வைத்து, சுற்றி வெள்ளரிக் காயை வட்ட வடிவில் அரிந்து வைத்துப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)