சூப்பரான இஞ்சி - பூண்டு சட்னி செய்வது எப்படி?





சூப்பரான இஞ்சி - பூண்டு சட்னி செய்வது எப்படி?

0
காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 
சூப்பரான இஞ்சி - பூண்டு சட்னி செய்வது எப்படி?
பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல்  குணமாகும். 

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு  உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும். 
ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும். மருத்துவ குணம் கொண்ட இஞ்சி உணவு பொருட்களில் சேர்க்கப்படும் நல்ல பொருளாகும். 

சிறு துண்டு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளை தரும். அதிக இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இஞ்சியை உட்கொள்ள வேண்டும். 

சட்னி வைத்து சாப்பிட்டு சலித்து விட்டதா? இஞ்சி பூண்டு சட்னி ரெசிபி இங்கே உள்ளது. இது இட்லி- தோசைக்கு பர்ஃபெக்ட் சைட் டிஷ் ஆக இருக்கும்.
தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,

பச்சை மிளகாய் - 12,

புளி - எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - தேவையான அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு,

கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை :
இஞ்சி - பூண்டு சட்னி
1. பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

2. இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லா வற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
4.சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.

5.இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகிய வற்றுக்கு சிறந்த மருந்து.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)