ருசியான மீன் தலைக்கறி செய்வது எப்படி?





ருசியான மீன் தலைக்கறி செய்வது எப்படி?

0
சிங்கப்பூரில் பிரபலமான மீன் தலைக் கறி (Fish Head Curry) உலகத்தில் வேறு எங்கு தேடினாலும் இந்த டிஷ் கிடைக்காது. 
ருசியான மீன் தலைக்கறி செய்வது எப்படி?
அங்கு கிடைக்கின்ற மீனோட தலை ஒரு கிலோவிலிருந்து ஆரம்பித்து இரண்டரை கிலோ வரைக்கும் இருக்கின்றது. தாரளமா ஒரு தலையை மூணிலிருந்து நான்கு பேர் சாப்பிடலாம்.
அட்டகாசமான டெக்கரேஷனுடன் அதை கொண்டு வந்து வைத்து ரைஸும் கொடுப்பார்கள். ஃபிஷ் தலைக்கறியில வெண்டைக்காய், கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு கிரேவி மாதிரி இருக்கும். 
அதை ரைஸோட சேர்த்து சாப்பிட்டால், சொர்க்கத்துக்கே போன ஃபீல் கிடைக்கும்.

இந்த மீன் தலைக்கறி அந்த ஊரில் எப்படி செய்கிறார்கள் தெரியுமா? அவர்களிடம் நான் கேட்டு தெரிந்து கொண்ட மீன் தலைக்கறி ரெசிப்பி உங்களுக்காக இதோ.

தேவையானவை:

மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்ற வகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)

வெண்டைக் காய் - கால் கிலோ (முழுதாக போடவும்)

கத்திரிக் காய் -கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

நாட்டுத் தக்காளி் கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

சின்ன வெங்காயம் - கால் கிலோ (உரித்துக் கொள்ளவும்)

புளி - 200 கிராம் (கரைக்கவும்)
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

மல்லித் தூள் (தனியாத் தூள்) -4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய்- 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெல்லம் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு- 2 டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 2, 

கறிவேப்பிலை- சிறிது

செய்முறை:
ருசியான மீன் தலைக்கறி செய்வது எப்படி?
மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட் களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
இதில் வெண்டைக் காய், கத்திரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டுக் கிளறவும். 
புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை திக்காக வரும் போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். 

மீன் தலை 3 நிமிடம் தான் வேக வேண்டும். இட்லி, தோசை, சாதத்துக்கு அருமை யான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)