டேஸ்டியான சிலிப்பி குடல் சூப் செய்வது எப்படி?





டேஸ்டியான சிலிப்பி குடல் சூப் செய்வது எப்படி?

0
ஆட்டு குடல் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
டேஸ்டியான சிலிப்பி குடல் சூப் செய்வது எப்படி?
வயிற்றில் புண் இருப்பவர்கள் ஆட்டுக்குடலை சமையல் செய்து வாரம் இருமுறை சாப்பிடலாம். ஆட்டுக் குடல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். 

இதில் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 12, இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

அவை இரத்த சிவப்பணு உற்பத்தி, நோயெதிர்ப்பு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை. ஆட்டுக் குடலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, 
இது நம் உடலில் உள்ள செரிமான அமைப்பை ஊக்குவிக்கும். நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடலை ஆரோக்கியமானதாக்க உதவுகிறது. 

நம் பெருங்குடலில் உண்டாகும் புற்றுநோய் மற்றும் பிற செரிமானக் கோளாறுகளை குறைக்கவும் உதவும். மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிடுகையில் ஆட்டுக் குடலில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. 

கொழுப்பு உட்கொள்ளல் அல்லது குறைந்த கொழுப்புள்ள உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு இது பொருத்தமான விருப்பமாக அமைகிறது. ஆட்டுக் குடலை உண்பதால் சீரான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. 

சரி இனி ஆட்டு குடல் பயன்படுத்தி டேஸ்டியான சிலிப்பி குடல் சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை

சிலிப்பி குடல் -- 1 கப்

மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்

சீரகம் -- 1/2 டீஸ்பூன்

விளக்கெண்ணைய் -- 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் -- 10 என்னம்

மிளகுத் தூள் -- 3 சிட்டிகை

செய்முறை :
சிலிப்பி குடல் சூப்
முதலில் குக்கரில் கழுவி சுத்தம் செய்த சிலிப்பி குடலை போட்டு அதனுடன் விளக்கெண்ணைய், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் அனைத்தயும் 

சேர்த்து தண்ணீர் கொஞ்சம் அதிகமான அளவு ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
பின் குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பின் 3 விசில் வந்ததும், நிறுத்தி இறக்கவும்.

பின் சூப்பை பரிமாறும் போது மிளகுத் தூள் தூவி பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)