கேரட் லட்டு செய்முறை / Carrot Laddu Recipe !





கேரட் லட்டு செய்முறை / Carrot Laddu Recipe !

0
தேவையான பொருள்கள் : 

கேரட் துருவல் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

முந்திரி, திராட்சை, நெய் – தேவையான அளவு.

செய்முறை:
கேரட் லட்டு

அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் கேரட் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும். 

பிறகு, அதே பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துப் பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சவும். 

இதனுடன் கேரட், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  சிறிது ஆறிய பின் உருண்டை களாகப் பிடிக்கவும்.

குறிப்பு: 

கேரட்டில் உள்ள வைட்டமின் - ஏ கண்களைப் பாதுகாப்பதோடு சரும வறட்சியையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் - சி எலும்பு களை உறுதி யாக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)