வாழைத்தண்டு சாட் செய்முறை | Valaithandu Chad recipe !





வாழைத்தண்டு சாட் செய்முறை | Valaithandu Chad recipe !

0
சாட் என்பது கேரட், வெங்காயம், தக்காளி, கொத்து மல்லி தழை மற்றும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சாட் மசாலா பொடி 
வாழைத்தண்டு சாட்

போன்ற வற்றுடன் பொரி சேர்த்து கலக்கி செய்யப்படும் ஒரு உணவு வகை. அதனை பொரி கலவை என்று தமிழில் கூறலாம். இங்கு அதனுடன் வாழைத் தண்டை பொடியாக நறுக்கி சேர்த்துள்ளேன்.

வாழைத் தண்டு நார் சத்து நிறைந்த உணவு. வாழைத் தண்டு கொண்டு பொதுவாக வாழைத் தண்டு பொரியல் மற்றும் தயிர் பச்சடி மட்டுமே செய்வது வழக்கம். இங்கு வாழைத் தண்டை உபயோகித்து சாட் செய்யும் முறையை காணலாம்.

தேவையானவை :

1/2 கப் அரிசிப் பொரி

1/2 கப் சோளப் பொரி

1/3 கப் கேரட் சீவியது

1/2 கப் வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது

1 தக்காளி, பொடியாக நறுக்கவும்

1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்

1/4 கப் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

தூள் & சாஸ் :

1/2 Tsp கொத்த மல்லி தூள்

1/2 Tsp சீரகத் தூள்

2 சிட்டிகை மஞ்சத் தூள்

1/4 Tsp மிளகாய்த் தூள் 1/4 Tsp சாட் தூள்

1/4 Tsp உப்பு

1/2 Tsp கருப்பு உப்பு [ ராக் சால்ட் ]

1/2 Tsp இனிப்பு & புளிப்பு புளி சாஸ்

1/4 Tsp தேன்

மேலே கொடுக்கப் பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தூள்களை அவரவர் சுவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

பொரி நீங்கலாக கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப் பொருட்க ளையும் ஒரு வாயகன்ற பாத்திரத் தில் போட்டு நன்கு கலக்கவும். பின்பு பொரி இரண்டையும் சேர்த்து கலக்கவும். உப்பு மற்றும் காரம் சரி பார்க்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்த மல்லி தழை தூவி சுவைக்கவும். கலந்தவுடன் சாப்பிட்டு விடவும். இல்லை யெனில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகிவிடும். 

குறிப்பு : 

மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகுத் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)