டேஸ்டியான உளுந்து அல்வா செய்வது எப்படி?





டேஸ்டியான உளுந்து அல்வா செய்வது எப்படி?

0
உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது. உளுந்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. 
டேஸ்டியான உளுந்து அல்வா செய்வது எப்படி?
இவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும். உளுத்தம் பருப்பில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. 

அவை அனைத்து விதமான தோல் எரிச்சலையும் குறைக்க உதவும். உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். 

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகை உள்ளவர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது. உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. 

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். 

உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான உளுந்து அல்வா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை . :

200 gm - உளுந்து

200 ml - பால்

கேசரி கலர்

300 gm - நெய்

500 gm - சர்க்கரை

10 - முந்திரி துண்டுகள்

செய்முறை :
உளுந்து அல்வா
முதலில் ஒரு கப் உளுந்தை வறட்டாக வாணலியில் பொன்னிறத் துக்கு வறுத்து நைசாக பொடிக்கவும். மிக்சியிலேயே செய்து விடலாம். ரெண்டு மூணு தடவை சலித்து சலித்து மீண்டும் அரைத்தால் கப்பி மீதமின்றி மொத்தமாக பொடியும். 

அரை லிட்டர் காய்ச்சின பாலை எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் சர்க்கரையில் கொஞ்சமாகப் பால் விட்டுப் பாகு காய்ச்சவும். மீதி பாலில் இந்த மாவை கட்டியின்றி கலக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். 

கூடவே ஒரு சிட்டிகை உப்பு போட்டால் இனிப்பைக் கூட்டிக் காட்டும். கம்பிப் பதம் வந்ததும் கரைத்த இந்த மாவை கொட்டிக் கிளறவும். அவ்வப்போது நெய் விட வேண்டும். 

கலவை ஒரு கட்டத்தில் ஒட்டாமல் வரும். அப்போது இறக்கி வைக்கவும். இறக்கி வைத்து நிதானமாக கிளறி சுருண்டு வந்ததும் தட்டில் கொட்டி மேலே வறுத்த முந்திரி பருப்பை போடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)