ருசியான தம்ரூட் செய்வது எப்படி?





ருசியான தம்ரூட் செய்வது எப்படி?

0
பொதுவாக கடைகளில் கிடைக்கும் ரவா என்பது ஒரு விதமான கோதுமை தயாரிப்பு. அதன் பெயர் துரும் கோதுமை (Durum Wheat). கோதுமையின் மேல்தோலை நீக்கி, அதனுடைய ஸ்டார்ச் அடங்கிய கருஊனை (endosperm) தனியாக பிரித்து சலித்து ரவையாக எடுக்கப்படும். 
ருசியான தம்ரூட் செய்வது எப்படி?
இது சில விட்டமின்கள், புரதச்சத்து, பொட்டாசியம் மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்தது. 

ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். 

சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்து கின்றனர். கோதுமையில் ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. 
ரவை கோதுமை யிலிருந்து தயாரிக்கப் படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. 

அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி இனி ரவை பயன்படுத்தி ருசியான தம்ரூட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?

ரவை - 1 கிலோ,

முட்டை - 12,

சர்க்கரை - 1 கிலோ,

நெய் 1/2 கிலோ,
பால் - 1 லிட்டர்,

கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின் (விரும்பினால்),

முந்திரி - 100 கிராம்.

எப்படிச் செய்வது?
தம்ரூட்
வெறும் கடாயில் ரவையை பொன்னிற மாக வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாலையும் நன்றாக சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். சர்க்கரையை மிக்சியில் நைசாக அரைத்துக் ெகாள்ளவும். 

கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பை பொன்னிற மாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து ஹேண்ட் பீட்டர் கொண்டு நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும். 

இத்துடன் பொடித்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்ச மாக சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். 
இரண்டும் நன்றாகச் சேர்ந்து கலவை யானதும், வறுத்த ரவை மற்றும் காய்ச்சிய பால் இவைகளை சேர்த்து, மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்குக் கிண்டுவது போல் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

இந்தக் கலவை நுரை பொங்கும் போது, ஓரங்களில் சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரிப் பருப்பை கடைசியாக சேர்க்கவும்.

மணல் நிறைக்கப் பட்ட ஓர் இரும்பு தவாவை அடுப்பில் ஏற்றி மண் நன்றாக சூடு ஏறியதும் ஏற்கனவே கிளறி வைத்துள்ள தம் ரூட் கலவை உள்ள பாத்திரத்தை மண் சூடாக்கப்பட்ட தவாவின் மேல் வைத்து 
தம்ரூட் கேக்
ஒரு மூடியால் நன்றாக மூடிவிட்ட பிறகு மூடியின் மேல் நெருப்பு கங்குகளைப் போட்டு பிரியாணிக்கு தம் கட்டுவது போல் தம் கட்ட வேண்டும். 

அப்போது கீழே எரியும் நெருப்பானது மிதமான தீயில் இருக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு கத்தியை கலவைக்குள் விட்டுப் பார்த்தால் அது கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வெந்து ரெடியாகி விட்டது என்று அர்த்தம். 

பாத்திரத்தை கீழே இறக்கி மற்றொரு தட்டில் இந்தக் கேக்கை தட்டி விருப்பமான வடிவத்தில் வெட்டி உண்ணலாம். இது தான் தம்ரூட் கேக் செய்முறை.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)