அருமையான சிம்பிள் நண்டு கறி செய்வது எப்படி?





அருமையான சிம்பிள் நண்டு கறி செய்வது எப்படி?

0
நண்டு உண்ணும்போது வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்பட உதவும். கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் நண்டு உண்ணலாம். 
அருமையான சிம்பிள் நண்டு கறி செய்வது எப்படி?
இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடலாம். இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.  

நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் வராது. காயங்கள் விரைந்து குணமாக நண்டு உணவுகள் கை கொடுக்கும். 

இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது புதிய திசுக்களை உருவாக்குவதில் முனைப்பாக செயல்படும். 

சரி இனி நண்டு கொண்டு அருமையான சிம்பிள் நண்டு கறி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை : .

நண்டு - ஒரு கிலோ

புளி - எலுமிச்சை அளவு

பச்சை மிளகாய் - 4

தனியா பவுடர் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

பூண்டு – 2

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

மிளகாய் வற்றல் – 3

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கடுகு - ஒரு தேக்கரண்டி
செய்முறை : .
அருமையான சிம்பிள் நண்டு கறி செய்வது எப்படி?
முதலில் நண்டை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி இவற்றை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பிறகு வெந்தயத்தை போட்டு சிவக்க விடவும்.

சிவந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மறுபடியும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சுத்தம் செய்த நண்டு சேர்த்து உப்பு போட்டு தீயை மிதமாக வைத்து 20 நிமிடம் மூடிப் போட்டு வேக வைக்கவும். கலவை கெட்டியாக வந்ததும் அடுப்பி லிருந்து இறக்கவும். பின்பு பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)