குயே லாபிஸ் செய்முறை | Quey Laubis Recipe !





குயே லாபிஸ் செய்முறை | Quey Laubis Recipe !

0
தேவையானவை: 

மைதா மாவு – அரை கப்,

அரிசி மாவு – அரை கப்,

கார்ன் ஃப்ளார் மாவு – 2 டேபிள் ஸ்பூன்,

கெட்டியான தேங்காய்ப் பால் – அரை கப்,

பாண்டன் இலை (அ) லவங்கம் – ஒன்று,

சர்க்கரை – 3/4 கப்,

விரும்பும் வண்ணங்களில் ஃபுட் கலர் – சிறிதளவு,

உப்பு – 1/4 டீஸ்ன்பூன்.

செய்முறை:
குயே லாபிஸ்
அரை கப் தண்ணீரில் சர்க்கரை, பாண்டன் இலை சேர்த்து சர்க்கரை கரையும் வரை 

மிதமான தீயில் கொதிக்க வைத்து, சர்க்கரை கரைந்ததும் வடிக்கட்டி ஆற விடவும். 

அத்துடன் உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கவும். 

மாவுகளை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அதில் சர்க்கரை – தேங்காய்ப் பால் கலவை 

சேர்த்து கட்டி யில்லாமல் கலக்கி வடி கட்டவும் (தண்ணீர் பதத்தில்). 

இட்லிப் பாத்திரத்தில், ஆவியில் வேக வைக்க தண்ணீர் கொதிக்க விடவும். 

ஒரு சாண் அளவு நீளம் கொண்ட அடி சமமான பாத்திரத்தின் உள்ளே எண்ணெயைத் தடவவும். 

கலந்து வைத்துள்ள மாவை சரி பங்காக நான்கு கோப்பை களில் பிரித்து வைத்து, 

ஒவ்வொன் றிலும் விரும்பிய ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும். 

எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு நிறமுள்ள மாவை ஊற்றி, ஆவியில் வைத்து (புட்டிங் வேக வைப்பது போன்று), இரண்டு நிமிடம் வேக விடவும். 

திறந்து பார்த்தால் முதல் அடுக்கு வெந்து லேசாகப் பிசு பிசுப்பாக இருக்கும். 

இப்போது அடுத்த நிற மாவை மெதுவாக ஊற்றி இரண்டு நிமிடம் வேக விடவும். 

இதே போல எல்லா மாவையும் வேக வைத்ததும், கடைசி அடுக்கு ஊற்றி, 10 நிமிடங்கள் வே கவைத்து இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போடவும். 

குறிப்பு: 

மலேசியாவி லும் சிங்கப்பூரி லும் இந்தப் பாரம்பர்ய இனிப்பு இடம் பெறாத விசேஷங்களே இல்லை!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)