ருசியான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?





ருசியான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?

0
பூசணிக்காய் கொடி இனத்தைச் சேர்ந்தவை. இவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். 
ருசியான பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி?
சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. 

பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. 

உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.  

இந்த காயில் கலோரிகள், ப்ரோட்டீன், கார்போ ஹைட்ரேட், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பூசணி சாற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது.

தேவையானவை . :

பூசணிக் காய் – 1/2 கிலோ

நெய் – 175 கிராம்

சர்க்கரை – 300 கிராம்

கன்டென்ஸ்ட் மில்க் – 1 சிறிய டம்ளர் (அ) 

சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்

ஏலப் பொடி – 1 ஸ்பூன்

ஒடித்த முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

கேசரிப் பவுடர் – 1/4 ஸ்பூன்

தண்ணீர் – 11/2 கரண்டி

செய்முறை :

முதலில் பூசணிக் காயைத் துருவும் பொழுது, தண்ணீர்ச் சத்து நிறைய வெளியேறும். ஆனால் அது உபயோகப் படாது. 

சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே துருவிய பூசணியைப் பிழிந்து போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பூசணித் துருவலை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். 

சிலர் துருவலாகவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள். அடுப்பில் சிறிதளவு நெய்யை விட்டு விழுதைப் போட்டு, சர்க்கரையைச் சேர்க்கவும். நெய்யைச் சுட வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை + விழுதுடன் சேர்க்கவும். 

கிளறிக் கொண்டு இருக்கவும். மேற்கொண்டு, கன்டென்ஸ்ட் மில்க் அல்லது கோவாவாக இருந்தால், தண்ணீரில் கரைத்தாற் போல் செய்து கொண்டு கலவையில் சேர்க்கவும்.
கேசரிப் பவுடர், ஒடித்த முந்திரி, ஏலப்பொடி எல்லா வற்றையும் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல், சுருள வரும் பதத்தில் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, ஆறிய வுடன் வில்லை களாகப் போடவும்.

கோவாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்ப்பதற்குப் பதில் பூசணித் தண்ணீரைக் கூட உபயோகப் படுத்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)