டேஸ்டியான புலாவ் வித் பிரெட் செய்வது எப்படி?





டேஸ்டியான புலாவ் வித் பிரெட் செய்வது எப்படி?

0
பாசுமதி என்றாலே அது பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி வகை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வழக்கமாக இருக்கும் அரசி வகையை விட நீளமாக இருக்கும் இந்த பாசுமதி அரிசியை ஆயுர்வேதமும் பரிந்துரை செய்கிறது. 
புலாவ் வித் பிரெட்
பாசுமதி அரிசி மற்ற அரிசிகளை விட லேசானதாக இருக்கும். ஸ்டார்ச்சின் அளவும் இதில் குறைவு என்பதால் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.

அதனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் பத்தியத்தில் இருக்கும்போதும் கூட பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது. 

இந்த பாசுமதி அரிசியை எடுத்துக் கொள்ளும் போது உடலில் ஜீரண ஆற்றல் மேம்பட்டு. எளிதில் உடல் கழிவுகள் வெளியேற்றப்படும். 

பாசுமதி அரிசியில் உள்ள சில நுண் ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கதை சீராக்க உதவி செய்கிறது. அதோடு நரம்பு செல்களில் உள்ள நச்சுக்களை நீக்க பாசுமதி உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.

தேவையானவை:

பாசுமதி அரிசி - 250 கிராம்,

பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட்,

கேரட், வெங்காயம் - தலா 2,

பீன்ஸ் - 50 கிராம்,

குடமிளகாய் - 1,

பிரெட் துண்டு - 2,

நெய்யில் வறுத்த பிஸ்தா,

முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி,

கொத்தமல்- சிறிதளவு,

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தை காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசியை எடுத்துக் கொண்டு அதை நன்கு கலைந்து கொள்ளவும். 

பிறகு அதில் இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் அதை இறக்கி விடவும். 

பின்னர் கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குட மிளகாய், கேரட் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத் தூள், கொத்த மல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

பிறகு வெறும் கடாயில் புதினாவை சிறிது சிறிதாக வெட்டி போட்டு வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)