சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி?





சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி?

0
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். 
சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி?
நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. 

உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும். தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். 

கொழுப்பு செல்கலைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. 
வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும். வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளிக்காய் வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக் காய் - 250 கிராம்

ரவை - 250 கிராம்

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

புளித்த தயிர் - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவைக்கு

செய்முறை :
சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி செய்வது எப்படி?
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும். துருவிய வெள்ளரிக் காயுடன் ரவையை போட்டு கலந்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய், உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவைப் பட்டால் சிறிது நீர் ஊற்றவும் இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

வேக வைத்த இட்லியை தட்டில் வைத்து சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவை யுங்கள். சூப்பரான வெள்ளரிக் காய் இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)