சுவையான நேந்திரம் பழ கேக் செய்வது எப்படி?





சுவையான நேந்திரம் பழ கேக் செய்வது எப்படி?

0
நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது.
சுவையான நேந்திரம் பழ கேக் செய்வது எப்படி?
இரும்புச் சத்து குறைபாட்டு நோயான இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை தொடர்ந்து எடுத்து வரவேண்டும். நேந்திரம் வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாகும், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அவர்களுக்கு நேந்திரம் பழத்தை கொடுத்து வந்தால் நல்ல தூக்கத்தையும், புது ரத்த உற்பத்தியும், குழந்தைகள் பெறுவார்கள்.

மேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது.
பழுத்த நேந்திரம், மிளகு, பால் இம்மூன்றையும் கலந்து இரவில் சாப்பிட்டு வந்தால் இருமல் தொல்லை நிரந்தரமாக விலகும். நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். 

தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.

நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும். சரி இனி நேந்திரம் பழம் பயன்படுத்தி சுவையான நேந்திரம் பழ கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை :

நன்கு பழுத்த நேந்திரம்பழம் - 2

முட்டை - 2

வால்நட் - கால் கப்
மைதா - 1 கப்

உப்பு - 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - 2 கப்

செய்முறை :
நேந்திரம்  பழகேக்
பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். மைதாவில் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளுங்கள். 

முட்டையை உடைத்து சர்க்கரையில் ஊற்றி நன்றாக அடியுங்கள். முட்டைக் கலவையில் மாவை கலந்து கொள்ளுங்கள்.
ஒன்றிவரும் போது மசித்த பழக்கலவை, வால்நட் கலந்து, பேக்கிங் டிரேயில் ஊற்றி, 350 டிகிரி அளவுக்கு மைக்ரோவேவ் அவனில் வைத்து வேக வையுங்கள். நேந்திரம் கேக் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)