மெது வடை செய்முறை / Medhu Vadai Recipe !





மெது வடை செய்முறை / Medhu Vadai Recipe !

0
என்னென்ன தேவை?

உளுந்து – 500 கிராம்.

பச்சரிசி மாவு – 100 கிராம்.

பச்சை மிளகாய் – 2.

சின்ன வெங்காயம் – 200 கிராம்.

கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு.
மிளகு – 10 கிராம்.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
மெது வடை

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கட்டி விழாமல் பச்சரிசி மாவு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, 
கறிவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்துப் பிசைந்து, வட்டமாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

உளுந்து அரைத்த வுடன் வடை சுட வேண்டும். நேரம் கடந்தால் மாவு புளிக்க ஆரம்பித்து விடும். 

அதே போல அதிகம் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். பிறகு வடையில் எண்ணெய் இழுக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)