அருமையாக பலா முசு மசாலா கறி செய்வது எப்படி?





அருமையாக பலா முசு மசாலா கறி செய்வது எப்படி?

0
பிஞ்சு பலாக்காயை #பலாமுசு என்று கூறப்படுகிறது. இதை சமைத்தால் சுவை அருமையாக இருக்கும். 
பலா முசு மசாலா கறி
ஆனால் மேல் தோலை நீக்குவது தான் தொல்லை தரும் வேலை. ஆனால் இங்கு ராய்ப்பூரில் மார்க்கட்டில் தோல் நீக்கி துண்டுக ளாக்கி கொடுத்து விடுகிறார்கள். 
அதனால் பலாமுசு மசாலா கறியை அடிக்கடி செய்ய முடிகிறது. இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பலாமுசு

1 கப் பலா முசு அரிந்தது

1 Tbsp பச்சை பட்டாணி

மசாலா அரைக்க :

2 Tbsp தேங்காய் துருவல்

2 பச்சை மிளகாய்

1 Tsp சீரகம்

1 Tsp சோம்பு

1/4 Tsp பச்சை மல்லி விதை [ இருந்தால் ]
[ அ ] 1/4 Tsp மல்லி விதை

3 பற்கள் பூண்டு

1 சிறிய அளவு வெங்காயம்

2 சிட்டிகை உப்பு

கொத்த மல்லி தழை மற்றும் கருவேப்பிலை - விருப்பமான அளவு.

தாளிக்க :

1/2 Tsp கடுகு

1 Tsp உளுத்தம் பருப்பு

1 Tsp எண்ணெய்

அலங்கரிக்க :

கொத்த மல்லி தழை - சிறிதளவு.

செய்முறை :
பலா முசு
குக்கரில் கழுவிய பலாமுசு துண்டுகளை 1/2 கப் தண்ணீரில் 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் 1/2 Tsp உப்புடன் 1 விசில் வரும் வரை வேக விடவும். 

உடனே ஆவியை அடக்கி வெந்த காயை வெளியே எடுத்து ஆற வைக்கவும். பிறகு மிக்சியில் ஓரிரண்டு சுற்றுகள் சுற்றி எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள காயையும் பட்டணி யையும் சேர்த்து வதக்கவும்.

இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும். 

பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பி யாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். நன்கு சாரணியால் கிளறி விடவும்.

பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும். 
எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.
பின்பு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்த மல்லி தழையால் அலங்கரிக் கவும்.   சுவையான பலா முசு மசாலா கறி தயார்.

குறிப்பு :

மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். 

இல்லை யெனில் தண்ணீர் சுண்டுவ தற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)