பச்சை சேலட் செய்முறை / Green Salad Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை :

டிரெஸ்ஸிங் குக்கு

— 20 மி.லி. ஆலிவ் ஆயில்

— 20 மி.லி. வினிகர்

— 10 மி.லி. கடுகு எண்ணெய்

— சுவைக்கேற்ப உப்பு, மிளகு

இனிப்பு வெங்காயத் துக்கு

— 50 கி. வெங்காயம், நறுக்கியது

— 20 கி. சர்க்கரை

— 10 மி.லி. ரெட் ஒயின்

சாலடுக்கு

— 100 கி. ஐஸ்பெர்க் லெட்டியூஸ்

— 100 கி. லோல்லோ ரோஸ்ஸோ லெட்டியூஸ்

— 100 கி. ராக்கெட் இலை

— 20 கி. நறுக்கிய தக்காளி

டிரெஸ்ஸிங் தயாரிக்க
பச்சை சேலட்
1 ஆலிவ் ஆயில், வினிகர், கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். அத்துடன் உப்பு, மிளகு சேர்க்கவும். கான்ஃபிட் தயாரிக்க

2 நறுக்கிய வெங்காய த்தை சர்க்கரை, ஒயினில் ஐந்து நிமிடங்கள் அல்லது அது மென்மை யாக மாறும் வரை சமைக்கவும். 

சாலட்டை செட் செய்ய

3 ஐஸ்பெர்க், லோல்லோ ரோஸ்ஸோ லெட்டி யூஸ்களை சிறுசிறு துண்டுகளாக கிழித்து விட்டு, அதை கலக்குவதற்கு ஒரு பாத்திரத்தில் போடவும்.

4 ராக்கெட் இலைகளைச் சேர்க்கவும். டிரெஸ் ஸிங்கைச் சேர்த்து கலக்கவும்.

5 தக்காளி, வெங்காயத்தைச் சேர்க்கவும்.

6 சாலட் பவுலில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚