சூப்பரான நண்டு பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான நண்டு பிரியாணி செய்வது எப்படி?

0
கடல்வாழ் உயிரினங்கள் எப்போதுமே உடலுக்கு நன்மை தருபவை. அந்த வகையில், நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்ன காரணம்?
சூப்பரான நண்டு பிரியாணி செய்வது எப்படி?
நண்டுவில் வைட்டமின் A, B12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டின், செலினீயம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.. கொழுப்புக்களும் குறைவு. 

கலோரிகளும் குறைவு. புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால்தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளன. அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.. தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன. 

குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களிலிருந்து காத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

இன்னும் சொல்லப்போனால், இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது. 
ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவே நண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். 

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதனால் மருத்துவரை கலந்தோசித்து விட்டு உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தேவையானவை

சிவப்பு மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன்

புதினா, கொத்த மல்லி, உப்பு,

மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

தேங்காய் பால் - 4ஸ்பூன்

தயிர் - 4ஸ்பூன்

கரம் மசாலா -1/2 ஸ்பூன்

பட்டை -2

ஏலக்காய் -5
அன்னாசிப்பூ -2

மல்லித் தூள் -1ஸ்பூன்

எலுமிச்சை -1

நெய், எண்ணெய் -தேவையான அளவு

பச்சை மிளகாய் -2

இஞ்சி, பூண்டு விழுது -2ஸ்பூன்

கல்பாசி -2

தக்காளி -2

பாசுமதி அரிசி -300 கிராம்

நண்டு -300 கிராம்

வெங்காயம் -2

செய்முறை :
நண்டு பிரியாணி
முதலில் நண்டு பிரியாணி செய்ய முதலில் குக்கரில் அரிசியை போட்டு போதுமான அளவு தண்ணீர் சிறிது எண்ணெய் சேர்க்கவும் 

(சாதம் உதிரியாக வர) உப்பு கலந்து சாதம் வேகவைத்து அதில் நெய் ஊற்றி எடுத்துக் கொள்ளவும். .கடாயில் எண்ணெய்,ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து வறுக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும் கலர் மாறியதும் புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
பின்னர் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை கலந்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)