பிரெட் ஜாமூன் செய்முறை / Bread Jamun Recipe !





பிரெட் ஜாமூன் செய்முறை / Bread Jamun Recipe !

0
மாலை நேரத்தில் பள்ளி முடித்து வரும் குழந்தை களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுக்க நினைத்தால், 
ப்ரெட் ஜாமூன்
அப்போது அவர்களுக்கு பிரட்டை வைத்து குலாப் ஜாமூன் போல் செய்து கொடுக்கலாம்.

இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் ப்ரெட் – ஒரு பாக்கெட்

வெது வெதுப்பான பால் – தேவையான அளவு

சர்க்கரை – 300 கிராம்

ஏலக்காய் – நான்கு

ரெட் புட் கலர்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

​செய்முறை :

முதலில் தேவையான பொருட் களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ப்ரெட்டின் ஓரங்களை கத்தி அல்லது கட்டர் கொண்டு முழுவது மாக வெட்டி எடுக்கவும்.

ஓரம் நீக்கப் பட்ட ப்ரெட்டை சிறிய துண்டுக ளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்கவும். 

அதனுடன் வெது வெதுப்பான பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து 5 அல்லது 10 நிமிடம் ஊற விடவும்.

சர்க்கரை யுடன் புட் கலர், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து 

உருட்டும் பதம் அளவு பாகு காய்ச்சி கொள்ளவும். பிசைந்த மாவினை விரும்பிய வடிவில் உருட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் எண்ணெயை நன்கு கொதிக்க விட்டு, தீயை குறைத்து உருட்டி வைத்துள்ள 

உருண்டை களை கொஞ்சம் கொஞ்ச மாக போட்டு பொன்னிற மாக பொரிக்கவும்.

பிறகு பொரித்து வைத்திரு க்கும் உருண்டை களை பாகு உள்ள பாத்திரத் தில் போட்டு 2 மணி நேரம் நன்கு ஊற விடவும். 

சுவையான ஈஸி ஃப்ரெட் ஜாமூன் ரெடி.

குறிப்பு: 

வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)