அருமையான ராகி இட்லி செய்வது எப்படி?





அருமையான ராகி இட்லி செய்வது எப்படி?

0
ஒரு காலத்தில் நன்கு அறியப்பட்ட தானியமாக இருந்த ராகி, இன்று மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலுமாக நீங்கி விட்டது. ராகி ஆப்பிரிக்க கண்டத்தில் உருவானது. 
அருமையான ராகி இட்லி செய்வது எப்படி?
ஆயிரம் ஆயிரமாண்டுகளாக உகாண்டா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டு வருகின்றது. மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கிற்கு ராகியில் கால்சியம் உள்ளது. 

மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன. எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும். 

சர்க்கரை வியாதி எனச் சொல்லப்படும் நீரிழிவு நோயின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, கார்போ ஹைட்ரேட்டுடன் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் பலன்தரக்கூடிய ஃபைட்டோகெமிக்கல்ஸ் அடங்கிய உணவுகளின் தேவை அதிகரித்துள்ளது. 

நோயை எதிர்த்துப் போராடும் திறனுடையதாகக் கருதப்படும் முக்கிய காரணிகளைக் கொண்ட தாவரங்களிலிருந்து பெறப்படும் பலதரப்பட்ட வேதி மூலக்கூறுகளின் கலவைதான் ஃபைட்டோகெமிக்கல்ஸ் ஆகும்.

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

ராகி – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – தேவையான அளவு

இஞ்சி – 50 கிராம்

பூண்டு – 50 கிராம்

கொத்த மல்லித் தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

இட்லி தயாரிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராகியை தண்ணீரில் ஊற வைக்கவும். இட்லி மாவை நன்றாக மென்மையான இட்லி சுடும் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

சிறிதளவு ஊற வைத்த அரிசி எடுத்துக் கொண்டு, இதில் ஊற வைத்த ராகி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து, மிக்ஸியில் நன்கு நைஸாக அரைக்கவும்.

இதை இட்லி மாவுடன் கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)